மண்ணில் புதைந்த ஆரம்பப் பள்ளி...! நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு!
உகாண்டா நாட்டில் பெரும்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.
உகாண்டா நாட்டில் பெரும்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சூமே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின.
இந்த கனமழையால் பல இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மலுடாவில் பிரைமரி பள்ளியின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதனால் 200 பள்ளிக் குழந்தைகள் நிலைமை என்ன வென்று தெரியாமல் உள்ளது.
தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் விலங்குகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.