Asianet News TamilAsianet News Tamil

டிவிட்டரை இப்போதைக்கு வாங்கல... காரணம் இதுதான்... எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

twitter buying deal has been stopped temporarily says elon musk
Author
United States, First Published May 13, 2022, 5:00 PM IST

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிந்தன. உலகின் முதல் பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க், கடந்த சில ஆண்டுகளாகவே டிவிட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை விமர்சித்து வந்தார். இதனிடையே திடீரென்று அவர் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவர் டிவிட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க், சில நாட்களிலேயே ஒட்டுமொத்த டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

twitter buying deal has been stopped temporarily says elon musk

இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எலான் மஸ்க் கைகளில் டிவிட்டர் தளம் சென்றதும், அதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. இப்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மீது எலான் மஸ்க்கிற்கு நம்பிக்கை இல்லை என்றும் இதனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளோ, நிர்வாக கைமாற்றமோ நடக்காமலேயே இருந்தது. இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

 

மேலும் மேலும், ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், டிவிட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 5 சதவீதம் போலி கணக்குகள் போலியானவை என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், டிவிட்டர் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிந்தன. இந்த மாத தொடக்கத்தில், டிவிட்டர் தளத்தில் உள்ள பயனர்களில் 5 சதவீததுக்கும் குறைவானவர்கள் போலிக் கணக்குகள் என்று அந்நிறுவனமே மதிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios