பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 17 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
துருக்கியில் அகதிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
துருக்கியில் அகதிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் துருக்கி சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் துருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் சென்றவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஓஸ்ப் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் தறிகேட்டு ஓடியது. இதனையடுத்து, சாலையில் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.