மெக்சிகோவுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை பரிசாக அனுப்பி வைத்த துருக்கி! இதுதான் காரணம்!

மெக்சிகோவின் புரோட்டியோ என்ற நாய் துருக்கியில் மீட்புப் பணியின்போது இறந்ததால், அர்கடாஸ் என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை துருக்கி மெக்சிகோவுக்கு அளித்துள்ளது.

Turkey Gifts Mexico A German Shepherd Pup. Here Is Why

துருக்கி நாட்டில் சிரிய எல்லைக்கு அருகே பிப்ரவரியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மெக்சிகோ நாட்டு மீட்புப் படை உதவியது. அந்த மீட்புப் பணியின்போது மெக்சிகோ படையின் நாய் இறந்துபோனது. அதைத் தொடர்ந்து துருக்கி அரசு மெக்சிகோவின் ராணுவத்துக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்துள்ளது.

துருக்கி பரிசாக அனுப்பி வைத்திருக்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் பிறந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. பூகம்பங்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, இந்த நாய்க்குட்டி மெக்சிகோ நாட்டின் மீட்புப் படை நாய்களுடன் சேர உள்ளது.

துடுக்கான காதுகள் மற்றும் பெரிய பாதங்கள் கொண்ட கருப்பு மற்றும் பழுப்பு நிற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு 'அர்கடாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. துருக்கி மொழியில் இதற்கு "நண்பன் என்று பொருள். ஆன்லைன் வாக்கெடுப்பைத் நடத்தி இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா

"என்னை மிகுந்த அன்புடன் வரவேற்ற மெக்சிகோவைச் சேர்ந்த எனது நண்பர்களுக்கு நன்றி. ஒரு சிறந்த தேடல் மற்றும் மீட்பு நாயாக இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று அர்கடாஸ் கூறுவது போல மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

துருக்கியில் பணியின்போது இறந்த மீட்பு நாயான புரோட்டியோவைப் பராமரித்த அதே பயிற்சியாளரால் அர்கடாஸுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று மெக்சிகோ ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி நாட்டின் சிரியா நாட்டு எல்லைக்கு அருகே 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் துருக்கியில் மட்டும் 50,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். உலகையே சோகத்தில் ஆழ்த்திய இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டின. மெக்சிகோ துருக்கிக்கு மீட்பு நாய்களை அனுப்பியது. ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த புரோட்டியோ என்ற மீட்புப் படை நாய் பணியின்போது உயிரிழந்தது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண குழு: மத்திய அரசு உறுதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios