துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர பூகம்பங்களை நிலநடுக்கவியல் ஆய்வாளர்கள் சிலர் முன்கூட்டியே கணித்துக் கூறியிருக்கிறார்கள்.

துருக்கி மற்றும் சிரியாவில் அதிபயங்கர நிலநடுக்கங்களை ஏற்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் இதனை மூன்று நாட்களுக்க முன்பே கணித்துக் கூறி எச்சரித்துள்ளார்.

இதனை நிலநடுக்கவியல் நிபுணர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதமே கணித்துக் கூறியிருக்கிறார் என்று துருக்கியைச் சேர்ந்த டெய்லி சபா என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுமட்டுமின்றி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராக் ஹூகர்பீட் என்ற மற்றொரு புவியியல் ஆய்வாளரும் மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி இந்த நிலநடுக்கத்தைச் சரியாகக் கணித்துக் கூறியுள்ளார்.

Turkey Earthquakes: 17 ஆயிரம் பேர் பலி! துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு

ட்விட்டரில் இதுகுறித்து எழுதிய அவர், “மத்திய கிழக்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகியவற்றில் விரைவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படப் போகிறது” என்று தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்படப்போகிற பகுதி குறித்துக் காட்டப்பட்ட வரைபடத்தையும் தனது ட்விட்டுடன் இணைத்துள்ளார்.

Scroll to load tweet…

துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இதனால் அந்த நாடே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் 24 மணிநேரத்திற்குள் 7.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் எல்பிதானில் நிகழ்ந்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி துருக்கி மற்றும் சிரியாவில் 1400 பேருக்கு மேல் நிலநடுக்கத்தால் பலியாகியுள்ளனர். மீட்புப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில் பலி எண்ணிக்கையும் தொடர்ச்சியாக கூடிக்கொண்டே செல்கிறது.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு..!