துருக்‍கியில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்‍குதல் - 2 பேர் பலி!

துருக்‍கியில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்‍குதலில், காவலர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு கேமிராவில் பதிவான இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோகாட்சி வெளியாகி உள்ளது.

துருக்‍கியின் முக்‍கிய நகரான இஸ்தான்புல்லில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித் தாக்‍குதலில் இந்தியர்கள் இருவர் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இஸ்மிர் நகரில் மேலும் ஒரு தாக்‍குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நகர நீதிமன்றத்தின் வெளியே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்‍குதலில், காவலர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கிருந்த இரு பாதுகாப்பு கேமிராவில் பதிவான இந்த குண்டு வெடிப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


இந்த தாக்‍குதலில் ஈடுபட்ட இரு தீவிரவாதிகளையும் காவல்துறையினர் சுட்டுக்‍கொன்றனர். இத்தாக்‍குதலின் பின்னணியில், குர்தீஷ் தீவிரவாத அமைப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்பவப் பகுதியில் திரண்ட ஏராளமானோர், அந்த தீவிரவாத அமைப்புக்‍கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.