இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவிகோலில் 7.5.-ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த பயங்கர நிலக்கத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில் தற்போது இந்தோனேஷியாவில் சக்தி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவிகோலில் 7.5.-ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கம் சுலவேசி என்ற பகுதியில் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டாகி உள்ளன. இதில் சேதம் விவரம் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.