உஷார்...! இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஆபத்து! அதிபர் டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்று வேலை செய்துவரும் இந்தியர்களின் வேலையை பறிக்கும் வகையில் அந்த சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trumps proposed reversal of Obama guest worker

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்று வேலை செய்துவரும் இந்தியர்களின் வேலையை பறிக்கும் வகையில் அந்த சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களின் மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் வேலை வழங்கலாம் என அனுமதித்து முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. Trumps proposed reversal of Obama guest worker

இந்நிலையில், புதியஅதிபர் டிரம்ப் பதவி்க்கு வந்ததில் இருந்து அமெரிக்கர்களின் வேலை அயல்நாட்டவர்கள் பறிக்கிறார்கள். அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்ற கோஷத்தை முன்னெடுத்தார். இதன்படி வெளிநாட்டில் இருந்து வந்த வேலைசெய்பவர்களின் மனைவிகளுக்கு வேலைவழங்கும் ஹெச்-4 விசா சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. Trumps proposed reversal of Obama guest worker

பெரும்பாலும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும், இந்தியப் பெண்களுமே இந்த விசாவை வைத்துள்ளனர். இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்தியர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த சட்டத்தால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்க பணியாளர்கள் கொலம்பி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. Trumps proposed reversal of Obama guest worker 

இந்நிலையில் சனிக்கிழமை நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த உறுதிமொழியில்,  அடுத்த 3 மாதங்களில் இந்த சட்டத்தை ரத்த செய்து குறித்து முடிவு எடுக்கப்படும், இந்த வழக்கில் தீர்ப்பு ஏதும் வழங்க வேண்டாம் எனத் தெரிவித்தனர். ஆதலால், அடுத்த 3 மாதங்களில் அமெரிக்கர்காவில் வேலை செய்து வரும் இந்தியர்களின் மனைவி வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட ஹெச்-4 விசா ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios