உலகமே எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைவரின் கருத்துக்கணிப்பையும் உடைத்து எறிந்து, ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, 45-வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் தேர்வாகிறார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 538 செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற 270 உறுப்பினர்கள் ஆதரவு பெற வேண்டும்.

குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 27 மாநிலங்களில், 276 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அதிபராகத் தேர்வாகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், எதிர்பார்த்ததைக் காட்டிலும், குறைவாக 218 உறுப்பினர்கள் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.

அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 மணிக்கு) ஓட்டுபதிவு தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கி நடந்தது.

ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றாலும் சிலமணி நேரங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றார்.

மத்திய மற்றும் மேற்கு பகுதியில் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களிலும் கூடுதல் வாக்குகள் பெற்றனர்.

அதன்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோலினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி,மிசிசிப்பி, மிசோரி, அர்கன் சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒக்லஹாமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற்றார்.



ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசா சூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில் வாகை சூடினார்.

குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாநிலங்களும் அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை டிரம்ப்பும், ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியா மைனே , மின்னசோட்டா, லோவா, ஒரேகா ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாகவே இருந்தன. ஒருசில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. இந்த கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதில்மேல் பூனை என்று சொல்லக்கூடியதும், ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என்று அழைக்கக்கூடியதுமான ஓஹியோ, நார்த் கரோலினா, புளோரிடா ஆகிய மாநிலங்களில்டொனால்ட் டிரம்ப் தனதாக்கி வெற்றியை ருசித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சராகவும், செனட்டராகவும் ஹிலாரி இதற்கு முன் பணியாற்றி அரசியல் அனுபவம் கொண்டவர். ஆனால், வருமானம் ஒன்றையே குறியாகவைத்து, சூதாட்ட கிளப்புகளையும், ஓட்டல் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இருந்து, அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப் முதல் முதலாக வெள்ளை மாளிகைக்குள் குடியேறப்போகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் பெண்களுக்கு எதிரானவர், பெண்களுக்கு எதிரான செக்ஸ் லீலைகளில் மன்னன், இனவெறிபிடித்தவர், முஸ்லிம்களுக்கு எதிரானவர், மதச்சார்பற்றவர், அகதிகளை வெறுப்பவர் என பல குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஆளானார். ஆனால், அனைத்தையும் தவிடுபொடியாக்கி அதிபர் பதவிக்கு டிரம்ப் தேர்வாகியுள்ளார்.