உலகமே மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 276 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து அவரது வெற்றியை குடியரசு கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ட்ரம்ப்பிற்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளார் ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றி டொனால்ட் டிரம்ப்,

தனது வெற்றிக்காக கடுமையாக பிரச்சாரம் செய்த குடியரசு கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

தனது 8 மாத பயணத்தில் இறுதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், அமெரிக்காவை நண்பர்களாக கருதும் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன்

அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி அதிபர் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக போராடினார் என்றும், இருப்பினும் அதிபராக வெற்றி பெற்றதற்கு தன்னை வாழ்த்திய ஹிலாரிக்கு டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்