மக்‌கள் தொகை மிகுந்த நாடான இந்தியா 8 சதவிகித‌ வளர்ச்சி கண்டுள்ள போது அமெரிக்கா 3 சத‌விகிதத்துக்கும் குறைவாகவே வளர்ச்சி அடைந்திருப்பதாக அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற 3 நேருக்குநோ் விவாதங்களின் கருத்துகணிப்புகள் பெரும்பாலும் ஹிலாரிக்கு சாதகமாகவே உள்ளது. 

இந்நிலையில் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டாெனால்டு ட்ரம்ப், 

மக்‌கள் தொகை மிகுந்த நாடான இந்தியா 8 சதவிகித‌ வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அமெரிக்கா 3 சத‌விகிதத்துக்கும் குறைவாகவே வளர்ச்சி அடைந்திருப்பது கவலை அளிப்பதாக தொிவித்துள்ளாா். அமெரிக்காவின் வளர்ச்சி மந்தமாக உள்ளதாக விமர்சித்த ட்ரம்ப், தான் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி விகிதத்தை 4 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறியுள்ளார். மேலும், இந்த மந்தமான வளர்ச்சிக்கு ஒபாமா‌வின் மோ‌சமான நிர்வாகம்தான் காரணம் என்று‌ம், நான்கரை கோடி அமெரிக்கர்கள் அன்றாட உணவுக்கா‌க அரசை நம்பியிருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினாா்.