கொரோனா விவகாரத்தில் சீனா மீது ட்ரம்ப் வருத்தம்... பல்டியடிக்கும் அமெரிக்கா..!
கொரோனா விவகாரத்தில் அவர்கள் மீது எனக்கு வருத்தம்தான். எங்களிடம் அது குறித்து அவர்கள் தகவல்களை பரிமாறியிருக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.
உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அனைத்து அரசுகளும் வைரஸைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கோவிட்-19 வைரஸிற்கு பலியாகி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் கொரோனாவை உருவாக்கியதே அமெரிக்கா தான் என ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா மீது வருத்தம்தான் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “சீனா மீது எனக்கு சிறிய வருத்தம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன். நான் சீனாவை மதிக்கிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மதிக்கிறேன். ஆனால், கொரோனா விவகாரத்தில் அவர்கள் மீது எனக்கு வருத்தம்தான். எங்களிடம் அது குறித்து அவர்கள் தகவல்களை பரிமாறியிருக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.