அடடே... இப்படியொரு சிகிச்சையா..? கொரோனாவை விரட்ட மாற்றி யோசித்த ட்ரம்ப்... உற்று நோக்கும் உலக மருத்துவர்கள்.?!

கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அமரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யுக்தியை கூறியுள்ளார்.

Trump is trying to turn Corona treatment new away

கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அமரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யுக்தியை கூறியுள்ளார்.

அமெரிக்காவில்  உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவை பலவீன படுத்தி அழிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

 Trump is trying to turn Corona treatment new away

75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது சில நிமிடங்களில் வைரஸ் இறக்க கூடும் என்றும், சூரிய ஒளி 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இக்கும் போதும்,  80 சதவீதம் அளவுக்கான ஈரப்பதமும்  18 மணிநேரம் என்ற கொரோனாவின்  ஆயுட்காலத்தை பாதியாக குறைக்கிறது அதாவது  6 மணி நேரமாக குறைக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பில் பிரையன் தெரிவித்தார்.

சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும் காற்று மண்டலத்திலும் அது வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது அதன் விரயம் குறையவும் செய்கிறது குறிப்பாக இந்தியாவில் கோடை காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளது, என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சையில், கிருமிநாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி முயற்சிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய ஐடியாவை கொடுத்துள்ளார். Trump is trying to turn Corona treatment new away

உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 529 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.Trump is trying to turn Corona treatment new away

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், "கொரோனா வைரஸ் அதிகமான வெப்ப நிலை மற்றும் ஈரப்பதமான சூழலில் உயிர் வாழாது என்று ஆய்வு முடிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. சூரியனின் ஊதா கதிர்களை உடலுக்குள் செலுத்தி, அதனை பரிசோதனை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா? என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும்" என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் இந்த கூற்று, மருத்துவ நிபுணர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios