அதிபர் பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவர்..!! ஒபாமா மனைவிக்கு ட்ரம்ப் மீது இவ்வளவு கோபமா..??

ஆறுதல் மற்றும் ஸ்திரத்தன்மை,  நம்பிக்கையின் அடையாளமாக இருந்த வெள்ளை மாளிகை, தற்போது பிரிவு, அராஜகம் மற்றும் அனுதாபமின்மையின் அடையாளமாக மாறி விட்டது 

Trump is ineligible for the presidency, Michelle Obama throws accusations

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தப் பேரிடருக்கு பதிலாக அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர் -3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக மீண்டும் டிராம்ப் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். கொரோனா வைரஸ் ஒருபுறமிருந்தாலும் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஜோ பிடனை ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி அறிவிக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு, காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கியது. 

Trump is ineligible for the presidency, Michelle Obama throws accusations

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளான நேற்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா அதில் பங்கு பெற்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் டரம்பை மிக கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:- டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கர்களுக்கு தவறான ஜனாதிபதி என விமர்சித்தார். டொனால்ட் ட்ரம்ப் திறமையற்ற ஜனாதிபதி என்றும் கூறினார். அவருக்கு எந்த அனுதாபமும் இல்லை என்று மிச்சல் கூறினார், ஆறுதல் மற்றும் ஸ்திரத்தன்மை,  நம்பிக்கையின் அடையாளமாக இருந்த வெள்ளை மாளிகை, தற்போது பிரிவு, அராஜகம் மற்றும்  அனுதாபமின்மையின் அடையாளமாக மாறி விட்டது  என கூறினார். மொத்தத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று நேர்மையுடனும் தெளிவுடனும் கூறுகிறேன் என்றார். 

Trump is ineligible for the presidency, Michelle Obama throws accusations

அவரது வேலையை அவர் நன்றாக செய்வார் என்று எதிர்பார்த்து அவருக்கு போதிய கால அவகாசத்தை நாம் வழங்கி விட்டோம், இனியும் வழங்க முடியாது, அவர் இந்த பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவர் அல்ல என்பதை அவர் நிரூபித்துவிட்டார், முதலில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு தீர்கமான முடிவு, தெளிவான சிந்தனை வேண்டும் ஆனால் அது டரம்பிடம் இல்லை. தற்போது அடிப்படை தேவைகளுக்காகவே மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே தங்கள் வாக்குகளை ஜோ பிடனுக்கு செலுத்துங்கள். உங்கள் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள்,  ஊழலை ஒழிக்க ஜோ பிடன் சரியான தேர்வாக இருப்பார், நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடிய தேர்தல் இது என மிச்சல் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios