அமெரி்க்காவுக்குள் நுழைய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு தடைவிதித்து சமீபத்தில் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று குரல் கொடுத்த அரசு தலைமை வழக்கறிஞர் ேசலி யேட்ஸை அதிரடியாக பதவிநீக்கம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

அவருக்கு பதிலாக, கிழக்கு விர்ஜினியா மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் டானா போன்ட்டி என்பவரை நியமித்து வெள்ளைமாளிகை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து உலக நாடுகள் அச்சமடையும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த, சமானிய மக்களுக்கான ஒபாமா கேர் மருத்துவ திட்டத்தை முதலில் ரத்து செய்தார், அதன்பின் பசிபிக் நாடுகளுடான வர்த்தக திட்டத்தை ரத்து செய்தார்.

அடுத்ததாக,ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளி்ல் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் தடையும், அகதிகள் நுழைய 120 நாட்கள் தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்த உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து அமெரி்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் வாதிட அரசு வழக்கறிஞர் சேலி ேயட்ஸுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு பணிய அவர் மறுத்து நீதித்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், அதிபர் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக விதித்துள்ள 120 நாட்கள் தடை என்பது நியாயமில்லாதது. இந்த உத்தரவுக்கு ஆதரவாக என்னால் வாதிட முடியாது என்று கடிதம் எழுதினார்.

இதையடுத்து தனது உத்தரவுக்கு பணியாத, எதிராக குரல்கொடுத்த, அட்டர்னி ஜெனரல் சேலி யேட்ஸை பதவி நீக்கம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, கிழக்கு விர்ஜினியா மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் டானா போன்ட்டி என்பவரை நியமித்தார்.

அதிபர் டிரம்ப் தனக்கே உரியஅதிகாரத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்ைகயை எடுத்து இருப்பதால், இது குறித்து வெள்ளைமாளிகை கருத்த ஏதும்கூற மறுத்துவிட்டது.