குடியேற்றக் கொள்கையில் டிரம்ப் கொண்டுவந்த மாற்றத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சம் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள அந்நாட்டு மக்கள், போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தின் அடிப்படையில், அந்நாட்டின் புதிய அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையில், குடியேற்ற கொள்கையில் திருத்தம் கொண்டு வந்து டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், 1 லட்சம் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
இதனிடையே, டிரம்ப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அமெரிக்காவின் Seattle நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிரம்ப்பின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்க மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாஷிங்டன் டி.சி.யில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்குள்ள புகழ்பெற்ற டிரம்ப் இன்டர்நேஷ்னல் ஹோட்டல் முன்பாக, அதிபர் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், நடனமாடியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டிரம்ப்பின் பாகுபாடான அறிவிப்புகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
