பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடியதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கமாண்டர் காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்த நிலையில், தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.


இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் இன்று அவசரமாகக் கூடியது. அப்போது, அமெரிக்காவுக்கு எதிராக ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டது. 

அதன்படி  கமாண்டர் காசிம் சுலைமான் கொலக்கு காரணமாக அதிபர் ட்ரம்ப், பென்டகன், அமெரிக்க ராணுவம் ஆகியோ தீவிரவாதிகளாக அறிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டது. 

இந்த தீர்மானத்தை சபாநாயகர் லாரி ஜானி வாக்கெடுப்புக்கு விட்டதால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேறியது.மேலும்ஸ குட்ஸ் படைப்பிரிவின் மேம்பாட்டுக்காக 20 கோடி யூரோவை ஒதுக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.