தடம்புரண்டு குடியிருப்பு பகுதியில் புகுந்த ரயில் - 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!
மெக்சிகோ நாட்டில் ரயில் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் கன்சாஸ் சிட்டிக்கு சொந்தமான ரயில் ஒன்று தாணியங்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரில் அந்த ரயில் திடீரென தடம் புரண்டது.
இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. இதனால் அதில் ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியதியதி விபத்து ஏற்பட்டது. அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், மீண்டும் இதுபோல் நிகழ்வு நடக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.