தண்டவாளத்திலிருந்து தரைக்கு வந்த ரயில்...! மேம்பாலத்திலிருந்து விழுந்ததால் பலர் பலி...
அமெரிக்காவில் மேம்பாலத்தின் மீது சென்ற ரயில் தடம்புரண்டு சாலையில் சென்ற கார்கள் மீது விழுந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா பகுதியில் இருந்து ஒலிம்பியா சென்று கொண்டிருந்த ரயில் நெடுஞ்சாலை பாலத்தை கடக்கும் போது தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
இதில் சாலையில் சென்ற கார்கள் மீது ரயில் பெட்டிகள் விழுந்த நிலையில், ஒரு பெட்டி பாலத்திற்கும் ரோட்டற்கும் இடையே அந்தரத்தில் தொங்கியது.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் இறந்துள்ளதாகவும்,பெரும்பாலோனோர் காயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
இதனையடுத்து தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.காயம் அடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் பலரின் நிலைமை கவலை கிடமாக உள்ளதாகவும்,பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த கோர விபத்து குறித்து மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதனுடைய தாக்கம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது