அமெரிக்காவில் தலைகுப்புற விழுந்த காரில் சிக்கிய இரண்டு இளம்பெண்கள் போலீசார்  வந்து தங்களை மீட்கும்வரை  காருக்குள்ளேயே  டிக்டாக்வீடியோ செய்து வெளியிட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது . இந்த வேடிக்கை நிறைந்த  உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வேடிக்கையான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன,  அந்த சம்பவங்கள் சில நேரங்களில் நகைச்சுவையானதாக இருக்கலாம் அல்லது  அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம், 

அப்படி அதிர்ச்சிகலந்த  நகைச்சுவை சம்பவம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது . அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் இரண்டு பெண்கள் அதில் டிக் டாக் பதிவு செய்து வெளியிட்ட சம்பவம் தான் அது.  நேற்று முன்தினம் 2 இளம்பெண்கள் தங்களது காரை மிக வேகமாக ஒட்டிச் சென்றனர் .  அப்போது  அந்த கார் வளைவு பாதையில் திரும்பியபோது தலை குப்புற புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த  இரண்டு பெண்களும் காரில் சிக்கிக் கொண்டனர்  ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை . அதனால் போலீஸ் வரும்வரை காருக்குள்ளேயே காத்துக் கொண்டிருந்த வேண்டியதாயிற்று, ஆனால்  அவர்களால் காரில் இருந்து வெளியில் வர முடியவில்லை.

 

ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியான சூழலிலிருந்து  வெளியில் வர எண்ணினர், அதே நேரத்தில் விபத்தை சந்தித்த  பயத்திலும் பதற்றத்திலும் இருந்தனர் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த நிலையில் திடீரென அவர்களுக்கு ஒரு ஐடியா தோன்றியது .  தங்களுக்கு மிகவும் பிடித்த டிக் டாக் வீடியோ எடுத்து  அதை  சமூகவலைதளத்தில் வெளியிட்டனர் .  உண்மையிலேயே அது அவர்களுக்கு நல்ல பலன் கொடுத்தது.  போலீசார் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆன நிலையில் காருக்குள்ளேயே அவர்கள் டிக்டாக் செய்து  நேரத்தைக் கழித்தனர்.  பின்னர் அங்கு வந்த போலீசார் அவசரகதியில் அந்தப் பெண்களை காருக்குள் இருந்து மீட்டனர்,  ஆனால் அப்போதும் அந்த பெண்கள் பதட்டமில்லாமல்  டிக் டாக்கில் ஈடுபட்டிருந்தனர், அதைக்  கண்டு போலீசாரே வாயடைத்து நின்றனர்.