ஹெலிகாப்டர் ரெக்கையில் சிக்கிய சுற்றுலா பயணி… பின்னர் நடந்த கொடூரம்!!

கிரீஸில் ஹெலிகாப்டரின் பிளேடில் சிக்கி 21 வயதான பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tourist from british dies after being struck in chopper blades

கிரீஸில் ஹெலிகாப்டரின் பிளேடில் சிக்கி 21 வயதான பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான இளம் பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர் விடுமுறையை கழிக்க மூன்று சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு தனியார் விமானத்தில் சுற்றுலா சென்றார். அப்போது இளம் பிரிட்டிஷ் சுற்றுலா பயணி பெல் 407 ரக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அதிலிருந்து அவர் இறங்கிய போது அவருக்கு பின்னால் மற்றொரு ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டதை கவனிக்காத சுற்றுலா பயணி ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டர் எனப்படும் வால் பகுதியில் உள்ள பிளேடில் சிக்கினார்.

இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்...??? வெளியான பரபரப்பு தகவல்.

இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அவரது ஹெலிகாப்டருக்கு ரேடியோ மூலம் தகவல் அளித்ததன்பேரில் அவரது பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் 2வது ஹெலிகாப்டரின் பைலட் உயிரிழந்தவரின் பெற்றோரை தடுத்து நிறுத்தி ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி கூட்டி சென்றார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவை சொல்லி அடிக்கும் இந்தியா; இலங்கையில் பெரிய அளவில் முதலீடு; வெளியான புதிய தகவல்கள்!!

அதுமட்டுமின்றி சுற்றுலா பயணியை கொன்ற ஹெலிகாப்டரின் பைலட் மற்றும் இரண்டு தரை தொழில்நுட்ப வல்லுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெல் 407 இன் ரோட்டர் பிளேடுகள் இயக்கத்தில் இருந்தபோது, முதல் ஹெலிகாப்டரில் இருந்து பயணிகளை எப்படி இறங்க அனுமதித்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios