18000 பேரை வாரிக் கொடுத்த இத்தாலி..!! உக்கிரம் தனியாமல் வெறியாட்டம் போடும் கொரோனா..!!
இந்நிலையில் மேலும் 3 ஆயிரத்து 605 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று இத்தாலி பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 93 ஆயிரத்து 272பேருக்கு லேசான காய்ச்சல் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது இதன்மூலம் கொரோனா வைரஸால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது . இந்த வைரஸ் நுழையாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதன் கொடூர கரங்கள் உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ளது . இதுவரை உலக அளவில் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்த வைரஸால் இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , அமெரிக்கா , இங்கிலாந்து , ஈரான் , தென்கொரியா, உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .
இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில் இந்த வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவையும் மிக மோசமாக தாக்கிவருகிறது, இதுவரையில் அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து கடந்துள்ளது . ஆனால் இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை காட்டிலும் மிகக் குறைவுதான், அதாவது 1,43,626 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, அதாவது 18 ஆயிரத்து 279 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இந்த பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் உலக நாடுகள் இத்தாலியை கண்டு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் 3 ஆயிரத்து 605 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று இத்தாலி பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 93 ஆயிரத்து 272பேருக்கு லேசான காய்ச்சல் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வைரஸில் இருந்து 28 ஆயிரத்து 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இது மட்டுமே இத்தாலிக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது. மார்ச் மாதத்தின் இறுதியில் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த நிலையில் , தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய தொடங்கியிருப்பதாக இத்தாலி தெரிவித்துள்ளது. எதிர் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4024 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 610 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக மெத்தத்தில் இத்தாலி கொரோனாவுக்கு 18 ஆயிரத்து 729 பேரை இது வரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது . அதிகம் முதியவர்களை கொண்ட நாடாக இருப்பதால் அதிக உயிரிழப்பு நிகழ்வதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வந்தாலும் இதுவும் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.