அதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்..!! உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இத்தாலி என்ற ஒரு நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 17,127 பேர் உயிரிழந்துள்ளனர் , அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஜெர்மனி, போன்ற நாடுகளைவிட குறைவாக இருந்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் மிக அதிகமாக உள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இத்தாலி என்ற ஒரு நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 17,127 பேர் உயிரிழந்துள்ளனர் , அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஜெர்மனி, போன்ற நாடுகளைவிட குறைவாக இருந்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் மிக அதிகமாக உள்ளது , இந்த வைரசால் இதுவரை உலக அளவில் சுமார் 14 , 31, 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கிட்டத்தட்ட இந்த வைரஸால் உலக அளவில் 82, 072 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் உலகளவில் இந்த கொடூர வைரஸ் தன் கொடூர முகத்தை காட்டி வரும் நிலையில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம்வெளியாகியுள்ளது :-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானி நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது , கிட்டத்தட்ட அங்கு 81,802 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர் , ஆனால் 3 ஆயிரத்து 333 பேர் மட்டுமே அங்கு உயிரிழந்தனர் . கிட்டத்தட்ட 77, 279 பேர் வைரஸிலிருந்து குணமடைந்தனர் . பின்னர் மெல்ல அமெரிக்கா , ஐரோப்பா என கண்டங்களுக்கும் பரவிய அந்த வைரஸ் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த இத்தாலி, ஸ்பெயில் போன்ற நாடுகளை கடுமையாக தாக்கியது.
இத்தாலி வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டது , இந்த வைரஸ் காட்டுத்தீயாய் பரவியதில் 1, 35, 586 பேருக்கு அங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது . 24, 392 பேர் குணமாடைந்தனர், கிட்டத்தட்ட 17. 127 பேர் உயிரிழந்தனர் . இது உலக அளவில் கொரோனா வைரஸுக்கு நிகழ்ந்த அதிக உயிரிழப்பாக கருதப்படுகிறது , அதற்கடுத்த மற்றும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினை தாக்கத் தொடங்கிய கொரோனா அந்நாட்டில் 1, 41,942 பேரை பீடித்தது ,ஆனாலும் இன்னும் அதன் தாக்குதல் தொடர்கிறது. இதுவரையில் ஸ்பெயினில் சுமார் 14, 045 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 43, 208 பேர் அங்கு குணமாடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை , பிரான்சில் தனது கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்த இந்த வைரஸ் இதுவரையில் அங்கு 1, 09, 069 பேரை தாக்கியுள்ளது இன்னும் அது தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கிறது , இதற்கிடையில் சுமார் 10,328 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் , சுமார் 19,337 குணமடைந்துள்ளனர்.
அதேபோல் ஜெர்மனியில் 1,07, 663 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது , இதுவரை 2,016 பேர் மட்டுமே அங்கு உயிரிழந்துள்ளனர் . சுமார் 36,081 பேர் குணமாகியுள்ளனர் , ஆனால் வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் இதுவரையில் நான் லட்சத்து 4 ,00,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ,854 ஆக உயர்ந்துள்ளது . ஆனால் 21,674 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸின் மையமாக அமெரிக்கா பார்க்கப்படுகிறது , இந்த முக்கிய ஐந்து நாடுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்க்கும்போது , இத்தாலியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது , அதற்கு காரணம் அது அதிக அளவில் முதியவர்களை கொண்ட நாடு என்பதுதான் என மருத்துவக் காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதே ஜெர்மனியில் 1,07, 573 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே , அதேபோல் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 36, 081 ஆக உள்ளது , இவ்வளவு பேர் அந்த நாட்டில் குணமாடைந்துள்ளதற்கு காரணம், அங்கு வழங்கப்படும் முறையான மருத்துவ சிகிச்சை முறைகளே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்க காரணம் அங்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறியதுதான் என சொல்லப்படுகிறது. போதிய அளவில் அங்கு சமூக விலகலும் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது... எது எப்படியோ விரைவில் இந்த இக்கட்டிலிருந்து உலகம் மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பும் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.