Asianet News TamilAsianet News Tamil

மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வருவதில் ‘திடீர் சிக்கல்’

there is trouble to take Mallya to india
there is-trouble-to-take-mallya-to-india
Author
First Published May 13, 2017, 4:42 PM IST


வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வசித்து வரும்தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் வழக்கில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், ஜூன் 13-ந்தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ‘கிங்பிஷர்’ நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார். அதை திருப்பிக்கட்ட முடியாததால், லண்டனுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தப்பி ஓடினார். அங்கிருந்தபடியே தனது எம்.பி. பதவியையும் ராஜினமா செய்தார். பல்வேறு செக் மோசடிகள், பணத்தை செலுத்தக்கோரி வங்கிகள் சார்பில் தொடர்ந்த வழக்குகளில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் முடக்கி மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து, இங்கிலாந்து அரசிடம் மல்லையாவை கைது செய்து அழைத்து வரும் பேச்சில் ஈடுபட்டது.

இதில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக  லண்டன் ஸ்காட்யார்டு போலீசார் கடந்த மாதம் 19-ந்தேதி மல்லையாவை கைது செய்து, வெஸ்ட்மினிஸ்டர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், 3 மணிநேரத்தில் ஜாமீன் பெற்று மல்லையா வௌியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் 17-ந்தேதிநடைபெறுவதாக இருந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவும்லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை 17-ந்தேதியில் இருந்து, ஜூன் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இந்தியாவின் அதிகாரிகள் சார்பில் ஆஜராகி வாதிடும் ‘கிரவுன் விசாரணை சேவையின்’(சி.பி.எஸ்.) செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், “ எங்களைப் பொருத்தவரை வலிமையான, உண்மையான ஆதாரங்களைத் திரட்டி மல்லையாவுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்துவதுதான். இதற்காக வழக்கறிஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்கள் அடிப்படையில் சி.பி.எஸ். வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள்’’ எனத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios