அமெரிக்கா உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும்...!! அதிபர் ட்ரம்ப் " தில் " பேச்சு..!!
தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலகம் முழுவதும் வேகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற விஷயங்களில் நாங்கள் செய்ததைப் போலவே உலகின் பல பகுதிகளிலும் அதிக அளவு தடுப்பூசிகளை வழங்குவோம் என்று கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாராகும் பட்சத்தில் அது அனைத்து உலக நாடுகளுக்கும் வழங்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலக அளவில் 1.60 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6 லட்சத்து 63 ஆயிரத்து 765 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 44 லட்சத்து 98 ஆயிரத்து 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 52 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என ஒட்டு மொத்த உலகமும், தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதற்கான ஆராய்ச்சியில் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த நாடு முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்போகிறது என்று எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலகில் பல நாடுகள் covid-19 தடுப்பூசியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்து வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களிடம் கொரோனா தடுப்பூசி இருக்கும்போது, அது மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலகம் முழுவதும் வேகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற விஷயங்களில் நாங்கள் செய்ததைப் போலவே உலகின் பல பகுதிகளிலும் அதிக அளவு தடுப்பூசிகளை வழங்குவோம் என்று கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 ம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கம் என கூறியுள்ளார். திங்கட் கிழமையன்று, அமெரிக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி சாத்தியமான மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளதாக கூறினார். இந்த தடுப்பூசி அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாக உருவாக்கியுள்ளது. தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த சோதனையில் சுமார் 30,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்த முயன்றுவருவது குறிப்பிடதக்கது.