Asianet News TamilAsianet News Tamil

பணி நேரத்தில் உணவு அருந்தும் ஊழியர்களை பிடித்து கொடுத்தால் ரூ.1500 சன்மானம்..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..

பல்வேறு அலுவலகங்களில் பணி நேரத்தில் வெளியே சென்று  டீ சாப்பிடுவது, உணவு அருந்துவது  என தனது முதலாளிகளை ஏமாற்றிய ஊழியர்களுக்கு புது வகையாக செக் வைத்துள்ளார் தனியார் நிறுவன உரிமையாளர்..
 

The owner who put a stop to the employees who go to eat during working hours
Author
USA, First Published May 6, 2022, 11:09 AM IST

டீ சாப்பிட செல்லும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா பாதிப்பின் காரணமாக  பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் வேலை பறிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  ஊபர் நிறுவனம் தங்களது 3,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக  தனது 3 நிமிட ஜூம் காலில் மீட்டிங்கில் தெரிவித்தது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியது. இதே போல பல நிறுவனங்களும் வேலை நேரத்தில் பணி செய்யாமல் பொழுது போக்குக்காக வரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இப்படி பட்ட நிலையில் தனது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களையும்,  வேலை நேரத்தில் உணவு அருந்தவும், டீ சாப்பிட செல்லும் ஊழியர்களை கண்டுபிடிக்கவும் புதுவகையான டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார் தனியார் நிறுவன உரிமையாளர்.


The owner who put a stop to the employees who go to eat during working hours

ரூ.1500 சன்மானம்

இது தொடர்பான தனது அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஊழியர் ஒருவர் சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எச்சரிக்கை.. அனைத்து ஊழியர்களும் வேலை நேரத்தில் சாப்பிட கூடாது! வேலை நேரத்தில் சாப்பிடுபவர்களை பிடித்து கொடுத்தால் 20 டாலரும், இந்திய மதிப்பில் ரூ.1500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 முறைக்கு மேல் ஒருவர் மீது புகார் வந்தால் அந்த ஊழியர் உடனடியாக நீக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. இதனை சமூக வலை தளத்தில் பலர் விமர்சித்தும், கேளி செய்தும் வருகின்றனர். இந்த புதுவகையான  உத்தரவு மூலம் ஒரு சிலர் ஒவ்வொரு மாதமும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்றும் இந்த உத்தரவால் ஊழியர்கள் இனி டீ சாப்பிட செல்வதாக கூறி கட் அடிக்க முடியாது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios