ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா முதல் தடுப்பூசிக்கு வந்த சோதனை... ஒட்டுமொத்த நம்பிக்கையும் போச்சு..!

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதை ரஷ்யா கொண்டாடி வருகிறது.  இந்நிலையில், 'ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி போதுமான பரிசோதனைகளை நிறைவு செய்யவில்லை என ஜெர்மன் நாடு குற்றம் சாட்டி உள்ளது. 

The first vaccine for corona was discovered in Russia

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதை ரஷ்யா கொண்டாடி வருகிறது.  இந்நிலையில், 'ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி போதுமான பரிசோதனைகளை நிறைவு செய்யவில்லை என ஜெர்மன் நாடு குற்றம் சாட்டி உள்ளது. The first vaccine for corona was discovered in Russia

கொரோனாவை விரட்ட  முதல் தடுப்பூசியை உருவாக்கியதாகவும் அதனை தனது மகளுக்கு முதன் முறையாக செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின்  அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாகவும், நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் கூறி இருந்தார். இரு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு இந்தத்தடுப்பூசியை ரஷ்யா கொண்டு வந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் எனக் கூறப்பட்டது. The first vaccine for corona was discovered in Russia

இதுகுறித்து ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ‘’தடுப்பூசியை முதலில் கொண்டு வருவதைவிட பாதுகாப்பாக கொண்டு வருவதே முக்கியம். கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவாக ஒரு தடுப்பூசியைப் போடுவதைத் தொடங்குவது ஆபத்தானது. அது தவறாக மாறினால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உயிரிழக்கவும் கூடும்.

The first vaccine for corona was discovered in Russia

ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது. அனைத்து தகவல்களுடன் நல்ல தடுப்பூசி கிடைத்தால் மகிழ்ச்சியே. ஆனால், ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசி குறித்து அதிக தகவல்கள் வெளிவரவில்லை. அதுதான் அடிப்படை பிரச்சினை. போதுமான அளவும் சோதிக்கப்படவில்லை. தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வர, முடிவுகளை பொதுவில் வைப்பது மிக முக்கியமானது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios