சிங்கப்பூரில் மிளகாய் காய வைத்து காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய கிராமத்து‘அம்மா!! மனதை உருகுலைய வைக்கும் காட்சி...

சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தமிழிககத்தை சேர்ந்த கிராமத்து அம்மா ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய காட்சி பார்ப்பவர்களை  கண்கலங்க வைத்துள்ளது.
 

The Emotional Mother photo viral on Social media

அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல. அம்மா ஒரு உணர்வு. அம்மா என்றால் அன்பு, பாசம். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் தெய்வத்துக்கே நான்காவது இடத்தை கொடுத்த நம் முன்னோர்கள் அன்னைக்கு முதலிடம் கொடுத்தனர். அப்படிப்பட்ட அன்னை ஒருவரைப் பற்றிய நெஞ்சுருக்கும் செய்தி தான் இது.

சென்னையில் வசித்து வரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த  தங்களது பிள்ளைகளை பார்க்க வரும் அம்மாக்கள் வத்தல் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி மிளகாய்ப் பொடி, தேங்காய் எண்ணெய், தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், ரேஷனில் கிடைக்கும் சர்க்கரை, உளுந்து என அனைத்தையும்  சென்னைக்கு  சுமந்து  வந்து கொடுக்கும் அம்மாக்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

தமிழகத்தில் ஒரு மூலையில் கிராமத்தில் உள்ள அம்மா ஒருவர்  சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றுள்ளார். அந்த அம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே காவலுக்கு நீட்டி முழங்கி படுத்தார். பயண அயற்சியில் தூங்கியும் விட்டார். படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

The Emotional Mother photo viral on Social media

இதுகுறித்து ரகுவசந்தன் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘’இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார். இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

அந்தம்மா மிளாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து படுத்துள்ளார். இதை உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டமானது. பெற்றோரை வரவழைக்கும்போது இதுபோன்ற செயல்களை தவிர்க்க அறிவுருந்துங்கள். பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கித் திண்ணும் நெட்டிசன்களுக்கு வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம்கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாய் அன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணினி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை.”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios