வேன் மீது டிரக் கவிழ்ந்து கோர விபத்து - 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!
பாகிஸ்தானில் வேன் மீது டிரக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் வேனில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கைர்புர் என்ற இடத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிகொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றிச்சென்ற டிரக் ஒன்று வேன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் பொக்கலைன் வாகனத்தை கொண்டு டிரக்கை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலைவேளையில் நிலவிய அடர் பனியே இந்த விபத்துக்கு காரணம் என்று சிந்த் மாகாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.