Asianet News TamilAsianet News Tamil

சீனா செய்த கொடூர செயல்... வக்கிரங்களை வெளியிட்டு ஆதாரங்களை புட்டுப்புட்டு வைத்த பேராசிரியர்..!

வைரஸ் குறித்த தகவல்களை உடனே வெளியிட என்னை அனுமதிக்கவில்லை. சீனா ஆரம்ப காலகட்டத்தில் நோய் பரவலை கண்டுகொள்ளவில்லை. 

The atrocity committed by China ... The professor who exposed the perversions and falsified the evidence
Author
China, First Published Jul 29, 2020, 5:55 PM IST

சீனா, வுஹானில் ஆரம்பித்த கொரானா வைரஸ் பரவலை மறைத்தது என உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, சீனாவில் ஆரம்பக்காலத்தில் கொரானா வைரஸ் நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர், டிசம்பர் மாதம் வுஹானில் ஏற்பட்ட தீவிர நோய்ப் பரவலை உள்ளூர் அதிகாரிகள் மறைத்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.The atrocity committed by China ... The professor who exposed the perversions and falsified the evidence

வுஹானில் ஆய்வு நடத்திய நடத்திய பேராசிரியர் குவோக் யுங்க யூஎன், ’’கொரானா வைரஸ் சான்றுகள் அழிக்கப்பட்டது. இது புது வகை வைரஸ் என்ற கண்டுபிடிப்புக்கு, பதிலும் மெதுவாகவே இருந்தது. வுஹான் சந்தையை நாங்கள் பார்வையிடச் சென்றபோது அங்கு ஏற்கனவே சுத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே வைரஸ் பரவிய இடமே இவ்வாறு செய்யப்பட்டதால் அங்கு எங்களால் வைரஸ் பரவியதற்கான காரணத்தைக் கண்டறியமுடியவில்லை.The atrocity committed by China ... The professor who exposed the perversions and falsified the evidence
 
வுஹானின் உள்ளூர் அதிகாரிகள் எதனையோ மறைப்பதாக நான் சந்தேகிக்கின்றேன். வைரஸ் குறித்த தகவல்களை உடனே வெளியிட என்னை அனுமதிக்கவில்லை. சீனா ஆரம்ப காலகட்டத்தில் நோய் பரவலை கண்டுகொள்ளவில்லை. டிசம்பரில் மருத்துவர் ஒருவர் சக ஊழியர்களை எச்சரிக்க முயன்றபோது அவருக்கு அபராதம் விதித்தனர்’’என அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதற்குப் பதிலளித்த சீனா, தன் மீது வரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios