தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் அடுத்த பிரதமர்.. தவறாக அறிவித்த பிரபல இந்திய ஊடகம் - சிங்கையில் சலசலப்பு!

இந்தியாவில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 (G20) உச்சிமாநாட்டின் போது, ​​இந்தியாவில் உள்ள ஒரு செய்தி நிறுவனம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் "வெளியேறும்" பிரதம மந்திரியாகவும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்தினத்தை "புதிய பிரதமராகவும்" தவறாக அறிவித்துள்ளது.

Tharman Shanmugaratnam new pm of singapore false news by Indian News Channel later video deleted ans

கடந்த செப்டம்பர் 9 அன்று அந்த பிரபலமான இந்திய ஊடகம், ஜி20 மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்தபோது தான் இந்த தவறு நடந்தது. அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு செய்தி வாசிப்பாளர், லைவில் பேசிக்கொண்டிருக்கும்போது "தர்மன் சண்முகரத்தினம் தான் புதிய சிங்கப்பூர் பிரதம மந்திரி என்றும், லீ சியென் லூங் ஓய்வு பெறவுள்ள பிரதமர் என்றும் தெரிவித்தார். 

வெளியான அந்த வீடியோவில், இந்தியா அளித்த சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் லீ நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தான் அந்த தவறான அறிவிப்பு வெளியானது, மேலும் அந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கலந்து கொள்ளவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், பல சமூக வலைத்தளங்களில் அது வலம்வந்து கொண்டிருக்கிறது. 

தெற்கு கார்டோமில் பயங்கர தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு; சூடானில் தொடரும் ராணுவ மோதல்!!

மிகமுக்கிய பொறுப்பில் இருக்கும் ஊடகங்கள், தகவலை வெளியிடும்போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் லீ கடந்த செப்டம்பர் 8 முதல் 10 வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த ஜி20 மாநாட்டில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில் அதன் முழு வெற்றிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ, இந்திய பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலை பார்வையிட்ட இந்திய தேர்தல் ஆணையர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios