தாய்லாந்திற்கு சீனர்களின் வருகை குறைந்துள்ளதால் அங்குள்ள சுற்றுலாத்தலங்கள்  பல வெறிச்சோடி காணப்படுகின்றன எப்போதும் இல்லாத அளவிற்கு அங்குள்ள உல்லாச விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடற்பகுதியில் அமைந்துள்ள தாய்லாந்து உல்லாச விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்குகிறது, இங்குள்ள அழகிய கடற்கரைகள், இரவு நேர விடுதிகள்  கேளிக்கை மையங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்ததுடன்,  அது ஒரு குதுகல கேந்திரமாக இருந்து வந்தது.  அந்நாட்டின் மொத்த வருமானத்தில் 18 சதவீதம் சுற்றுலாப்பயணிகளின் மூலமாகவே கிடைத்துவந்தது.  நாட்டிற்கு வந்து உல்லாசம் அனுபவிக்க  கூடியவர்களில்  25% பேர் சீனர்கள்.  இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.  இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் அதாவது 22 லட்சம் சீனர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் வருகையை தாய்லாந்தில் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

இதனால் தாய்லாந்து தெருக்கள்,  மற்றும் உல்லாச விடுதிகள், வெறிச்சோடி காணப்படுவதாக தாய்லாந்து சுற்றுலா கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா- சீனா இடையே ஏற்பட்ட பொருளாதார மோதல்  காரணமாக சீனர்களின் வருகை  இங்கு வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் தாய்லாந்தின் கரன்சியான (pattin) பாட்டின் மதிப்பு சீன கரன்சிக்கு இணையாக கணிசமாக உயர்ந்துள்ளதால்  முன்பை விட அதிக பணம் செலவழிக்க நேரிடும் என்பதால்  சீனர்கள் தாய்லாந்துக்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.  இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான பட்டாயா  ஹோஹோ  சமூய்,  போன்ற இடங்களில்  ஹோட்டல்  ரூம்கள் காலியாக உள்ளது.

இதானல் வாடகை கட்டணம் சுமார் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது,  சுமார்  20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தாய்லாந்தின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. சீனர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் அதை ஈடுகட்ட இந்தியர்களின் வருகையை தாய்லாந்து எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதிக அளவில் தாய்லாந்துக்கு இந்தியர்கள் உல்லாச சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.