Asianet News TamilAsianet News Tamil

தன் உயிரைக் கொடுத்து சிறுவர்களின் உயிரைக் காத்த மாவீரன்

Thailand boys rescued by from cave by saman gunan
Thailand boys rescued by from cave by saman gunan
Author
First Published Jul 11, 2018, 11:13 AM IST


தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்ற தனக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜனை அவர்களுக்கு வழங்கிவிட்டு திரும்ப நீந்தி வரும்போது சமன் குகன் என்ற முன்னாள் கடற்படை  வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து  நாட்டில் தாம் லுவாங் என்ற குகைக்கு கடந்த  ஜுன் மாதம் 23–ந் தேதி  சுற்றுலா சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர்.

அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இதையடுத்து அவர்களை காப்பாற்ற தாய்லாந்து கடற்படையினர் களத்தில் குதித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட  பல நாடுகள் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க தங்களது நாட்டு கடற்படை வீர்ர்களை அங்கு அனுப்பி வைத்தனர்.

Thailand boys rescued by from cave by saman gunan

அந்த குகைக்குள்  அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக  கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், 9 ஆம் தேதி  4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

மீதமிருந்த  மற்ற  4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் நேற்று கடற்படையினர் மீட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அளித்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Thailand boys rescued by from cave by saman gunan

தற்போது அவர்கள் எப்படி காப்பாற்றப்பட்டார்கள் என்பது  குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த குகைக்குள் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது.

ஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இல்லாமலும் , 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினம் என்பதால் அந்த சிறுவர்களை பாதுகாக்க  பயிற்சியாளர் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளார்.

அவர்களிடம் இருந்த உணவை பகிர்ந்து கொண்டு சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் பயிற்சியாளர் எகாபோல் பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன்,  தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்துள்ளார். இந்த வழிமுறைதான் அவர்களை 15 நாட்களுக்கு மேலாக உயிருடன் வைத்துள்ளது.

Thailand boys rescued by from cave by saman gunan

இது ஒரு புறம் இருக்க குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீர்ர் சமன் குணன் குகையின் உட்புறமாக நீந்திச் சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்தார். இவர் கொண்ட சென்ற சிலிண்டர்கள் அங்குள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லாத்தால், தான் நீத்திச் செல்லும்போது பயன்படுத்தி ஆக்ஸிஜன் சிலிண்டரை குகையின் உள்ளே சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிவிட்டு, வெறுமனே நீந்தி வந்தார்.

Thailand boys rescued by from cave by saman gunan

ஆனால் அவர் குகையை விட்டு வெளியே வருவதற்குள் சமன் குணன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மற்ற கடற்படை வீர்ர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Thailand boys rescued by from cave by saman gunan

தனது உயிரை பொருட்படுத்தாது சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கிய தாய்லாந்து முன்னாள் கடற்படை வீர்ர் சமன் குணனின் தியாகத்தை பாராட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios