ஈரானில் மோசமான வானிலை காரணமாக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு வந்தது. அதில், விமானிகள் உள்ளிட்ட 10 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சரக்கு வாகனம் தரையிறக்க முற்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.