மாணவியின் அந்தரங்க உறுப்பை பள்ளி ஆசிரியர் ஒருவர்  வீடியோ எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலியே பயிரை  மேய்ந்த கதையாக தற்போதைய அடிக்கடி பள்ளி ஆசிரியர்களே மாணவிகளிடம் அத்துமீறும் செயல்கள் அரங்கேறி வருகிறது . இந்தியாவில் மட்டும் அல்ல இதற்கு வெளிநாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற வகையில் அங்கும் இதுபோன்ற  வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. 

கீழ்த்தரமான இது போன்ற செயல்களில் ஈடுபடும்  ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற அவமானங்கள்  இன்னும் ஓய்ந்தபாடில்லை .  அந்த வகையில் தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாட்டில் ஆசிரியரே,  பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது அங்கு இந்த வீடியோ  மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது இருக்கையில் அமர்ந்துள்ள ஆசிரியர் ஒருவர் மாணவியை ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வர சொல்கிறார். அந்த மாணவி தன் பக்கத்தில் வந்து நின்றதும்,  அவருக்கே தெரியாமல்  அந்த ஆசிரியர் தனது செல்போனால் அந்த மாணவியின் அந்தரங்க உறுப்பை படம் பிடிக்கும் கேவலமான செயலில் ஈடுபடுகிறார். அந்த மாணவி குட்டைப் பாவாடை அணிந்திருப்பதை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் இப்படி செய்கிறார்.

அவரின் இந்த செயலை கண்ட  மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பெயரிட்டுள்ளனர்.  அது தற்போது வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்க்கும் பல சம்பந்தப்பட்ட ஆசிரியரை சும்மா விடக்கூடாது அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும்,  மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஈக்வடார் நாட்டு கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பள்ளி ஆசிரியரே மாணவியை இப்படி தவறாக பயன்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.