ஆப்கானிஸ்தானில் தாடி வளர்க்காத 281 பேரை பணிநீக்கம் செய்த தாலிபான் அரசு!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தாடி வளர்க்காததால் 280க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு 13,000க்கும் மேற்பட்டோர் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது. பெண்கள் மீது பல்வேறு விதமான அபத்தமான கட்டுப்பாடுகளை விதித்து வீடுகளுக்குள் அடைத்து வைத்துள்ளனர். தற்போது ஆண்கள் மீதும் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தாலிபான் அரசாங்கத்தின் அறநெறி அமைச்சகம் தாடி வளர்க்கத் தவறிவிட்டனர் என்று கூறி, 280 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தின்படி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒழுக்கக்கேடான செயல்களுக்காக கடந்த ஆண்டு 13,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் கொள்கை இயக்குநரான மொஹிபுல்லா முக்லிஸ் இதனைக் கூறியுள்ளார்.
பூமியை இன்னொரு ஆபத்து! 25,000 கி.மீ. வேகத்தில் நெருங்கும் 620 அடி சிறுகோள்!! நாசா எச்சரிக்கை
இதேபோல கடந்த ஆண்டு மட்டும் 21,328 இசைக்கருவிகளை அழித்ததாக அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்தைகளில் ஒழுக்கக்கேடான படங்களை விற்பனை செய்வதைத் தடுக்க ஆயிரக்கணக்கான கணினி ஆபரேட்டர்களைத் தடை செய்துவிட்டாகவும் முக்லிஸ் தெரிவித்தார்.
பெண்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,600க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் முக்லிஸ் தெரிவித்தார்.
2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, காபூலில் உள்ள மகளிர் அமைச்சக வளாகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. அதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், அதை பொருட்படுத்தாத தாலிபன் அரசு ஐ.நா.வில் பணியாற்றும் ஆப்கன் பெண் அதிகாரிகள் இஸ்லாமிய உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த அறநெறி அமைச்சகம் பெண்கள் அணியும் உடை இஸ்லாமிய முறையில் உள்ளதா எனக் கண்காணிக்கிறது. பெண்கள் ஆண் பாதுகாவலர்கள் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. பெண்கள் ஹிஜாப் (இஸ்லாமிய உடை) அணிவதைக் கட்டாயமாக்கி இருக்கிறது. பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க வேண்டும் அல்லது முழு உடலையும் மறைக்கும் பர்தா அணிய வேண்டும்.
வெளிநாட்டில் படிக்க சூப்பர் சான்ஸ்! சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் சென்று படிக்கலாம்!!