Taliban Launch Rocket Attack and Kill at Least 20 Afghan Police Officers
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தாலிபான் தீவிரவாதிகளின் புகழிடமாகக் கருதப்படும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் பணியில் அதிபர் அஷ்ரப் கானி தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது. இந்தச் சூழலில் கந்தாரில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிக்கு வந்த தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 20 பேர் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் அதிகமான தீவரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ஷாபுல் மாகாண ஆளுநர் பிஸ்மில்லா ஆப்கன்மால் தெரிவித்துள்ளார்.
