அமொிக்க அதிபராக இன்று மகுடம் சூடும் டாெனால்ட் டிரம்ப்!
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இதற்காக, வாஷிங்டனில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக உள்ள, ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபரான, டொனால்டு டிரம்ப், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாா். நாட்டின், 45வது அதிபராக, அவர் இன்று பதவியேற்கிறார்.
இந்நிகழ்ச்சி, தலைநகர் வாஷிங்டன் 'கேபிடோல் பில்டிங்கில்' நடக்கிறது. இங்குதான் 'வெள்ளை மாளிகை'யும் உள்ளது. விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். அமெரிக்க உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
அதிபரைத் தொடர்ந்து, துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைக் பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இதில் பங்கேற்க 2.5 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின் டிரம்ப், தாெடக்க உரை ஆற்றுகிறார்.
டிரம்ப் பற்றி சில தகவல்கள்:
அமெரிக்க அதிபர்களில் வயதானவராக டிரம்ப் உள்ளாா். அவருக்கு வயது 70. இதற்கு முன் 1980ல் ரொனால்டு ரீகன், 69 வயதில் அதிபராக பதவி ஏற்றார்.
செனட் சபை உறுப்பினர், மாகாண கவர்னர் உள்ளிட்ட எந்த பதவியிலும் இல்லாமல் முதல் அதிபராக டிரம்ப் பதவியேற்கிறாா்.
2016ல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, டிரம்பின் சொத்து மதிப்பு 2.4 லட்சம் கோடி ரூபாய் என தொிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்புக்கு மாெத்தம் 3 மனைவிகள், முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவது மனைவி மெலினியா டிரம்ப். டிரம்புக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்
