சூப்பர் புயல் ரகசா தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் 14 பேர் உயிரிழந்த நிலையில், ஹாங்காங்கில் ஒரு பெரிய மேக மூட்டத்தின் திகிலூட்டும் வீடியோ புயலின் தீவிரத்தை காட்டுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் பயங்கரமான புயல்களில் ஒன்றான சூப்பர் புயல் ரகசா, தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயங்கர புயல் தைவானில் 14 உயிர்களையும், பிலிப்பைன்ஸில் 4 உயிர்களையும் பறித்துள்ளது. தெற்கு சீன கடற்கரையில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பெரிய மேக மூட்டம்

ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட ஒரு திகிலூட்டும் வீடியோவில், வானத்தில் ஒரு பெரிய மேக மூட்டம் உருண்டோடுவது புயலின் அசுர பலத்தையும் அதன் பிரம்மாண்டமான அளவையும் காட்டுகிறது.

ரகசா புயல் நெருங்கியபோது, ஹாங்காங்கில் உள்ள லாம்மா தீவில் ஒரு மேக அடுக்கு உருவாவது ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் காணப்படுகிறது. லோ-ஆங்கிளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, வானத்தில் பரவியுள்ள பிரம்மாண்டமான மேக மூட்டத்துடன், புயலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

Scroll to load tweet…

அலர்ட்டான சீனா

ரகசா புயல் படிப்படியாக ஹாங்காங்கிலிருந்து விலகிச் சென்றாலும், சூறாவளி போன்ற பலத்த காற்று நகரத்தை தொடர்ந்து தாக்கி வருகிறது. புயல் குவாங்டாங், சீனா நோக்கி நகர்ந்துள்ளதால், அங்குள்ள அதிகாரிகள் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர், மேலும் ரயில் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஹாங்காங்கில் இந்தப் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 760 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

Scroll to load tweet…

தைவானில் வெள்ளம்

தைவானின் குவாங்பூ நகரில், மண் கலந்த வெள்ள நீர் வீதிகளில் சீறிப்பாய்ந்து வெள்ளக் காடாக மாறியது. வெள்ளத்தில் ஒரு பாலம் உடைந்தது. வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மீட்பு படையினர் வீடு வீடாக சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Scroll to load tweet…

தைவானில், பலத்த காற்று பாலங்களை சேதப்படுத்தி, நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது. படகுகள் கடற்கரைகளில் வீசப்பட்டன. ஆற்றை ஒட்டிய பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது. சைக்கிள் பாதைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் வெள்ளத்தில் மூழ்கின.