Asianet News TamilAsianet News Tamil

கோடீஸ்வரரான பிச்சை…. உழைப்பால் உயர்ந்த பச்சைத் தமிழர் சுந்தர் பிச்சை…

Sundar pitchai
sundar pitchai
Author
First Published Apr 30, 2017, 8:24 AM IST


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணி புரியும் சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருவாய் 1304 கோடி ரூபாய் என என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற கூகுள் இணைய தள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் சுந்தர் பிச்சை. சென்னையைச் சேர்ந்த தமிழரான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6 1/2 லட்சம் டாலர் அதாவது 4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

ஆனால் இழப்பீடு என்ற வகையில் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் அதாவது 1,300 கோடி ரூபாய் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு அதிகம்.

கூகுளில் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு மட்டும்ல்லாமல் , விளம்பர வருவாயும் குவிந்துள்ளதுதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையின்கீழ் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை பெரும் லாபத்தை அந்நிறுவனத்துக்கு வாரி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப் பெரிய நிறுவனத்தில், மிகப் பெரிய பொறுப்பில் உள்ள சுந்தர் பிச்சை, உலகில் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் வகையில் உயர்ந்துள்ளது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios