தமிழகத்தின் சோழவந்தானில் பிறந்த சுப்ரமணியம் சுவாமி தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் சுகம் காண்பவர். இலங்கை தமிழர் படுகொலை , காவிரி பிரச்சனை தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனையில் எரிகிறதீயில் எண்ணெய் ஊற்றுவது போல் சுப்ரமணியம் சுவாமி பேசி வருவது பெருத்த எதிர்ப்பை ஒஎற்று வருகிறது.
பொறுக்கிகள் என போராடும் தமிழர்களை அழைத்து வம்பிழுத்த அவர் இன்று வரை பொறுக்கிகள் என்றே ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை அழைத்து வருகிறார். இதனால் இவருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மோதல் கூட ஏற்பட்டது.

இந்நிலையில் சாமிக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. போகிற இடமெல்லாம் எதிர்ப்பை சம்பாதித்து வரும் சுனா.சாமி அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு வாழும் வெளிநாடுவாழ் தமிழர்கள் இவரை கோஷமிட்டே ஓடவிட்டனர். பலத்த எதிர்ப்பை காட்டியதால் அரண்டு போன சாஅமி தெறித்து ஓடினார்.

சியாட்டல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுனா.சாமி வந்திருந்தார். ஏற்கனவே சுனா.சாமியின் டுவிட்டர் பார்த்து கொதித்து போயிருந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் சுனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.
அவர் வரும் வழியெல்லாம், கையில் பதாகைகளுடன் எதிர்ப்பு வாசகங்களை எழுதி பிடித்தபடி நின்றனர். அரங்கத்திற்குள்ளும் பார்வையாளர்களாக அமர்ந்துகொண்டனர். அரங்கத்திற்கு வந்த சுப்ரமணியம் சுவாமியை ஆங்கிலத்திலேயே வசை பாட துவங்கி கோஷமிட்ட தமிழர்களை பார்த்து திகைத்து போனார் சுனா சாமி.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பு அவமானப்பட்டுப்போனார் சுனா.சாமி. தாலியை கொடுத்து ஆசிர்வாதம் பண்ண சொன்னால் மணப்பெண்ணுக்கு தாலிகட்ட போன பெரியவரே உங்களுக்கு தமிழ் கலாச்சாரம் , பண்பாடு எல்லாம் பொறுக்கித்தனமாக தெரிகிறதா என்று கோஷமிட்டனர்.
போலீசாரும் , விழா ஏற்பாட்டாளர்களும் அவர்கள் கோஷங்களை தடுக்கவில்லை. அப்படி வந்தவர்களிடம் சுனா சாமியின் டுவிட்டரை காட்டி பொறுக்கி என்ற வார்த்தையின் அர்த்தத்தையும் சொல்லி இவரும் எங்களைச்சேர்ந்தவர் என்றவர் என்ற தகவலை சொல்லியிருக்கின்றனர்.
இதைப்பார்த்து சிரித்த அவர்கள் அங்கேயே போராட்டம் நடத்த அனுமதித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த சுனா .சாமி அரங்கத்தில் பேச ஆரம்பித்ததும் பண்பாடு கலாச்சாரம் பற்றி பேச வந்த சாமி பொறுக்கிகள் வந்திருக்கிறோம் என்று எதிர் கோஷமிட்டுள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்து கொண்டு பின்வாசல் வழியாக சுனா.சாமி ஓடி வந்துள்ளார்.
