கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரலில் இரத்த உறைதல் அபாயம்.. ஆய்வில் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் ரிஸ்க்..!

கொரோனா பாதித்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலனோருக்கு தீவிர இரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக ஸ்வீடன் நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 

Study Reveals Risk Of Serious Blood Clots Up To 6 Months After COVID-19

கொரோனா பாதித்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலனோருக்கு தீவிர இரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக ஸ்வீடன் நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிட் 19 பாதிப்புக்கு பிறகு மூன்று மாதங்களில் நரம்பில் இரத்தம் உறைதல் மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு நுரையீரலில் இரத்த அடைப்பு ஏற்படும் பிரச்சனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  அதே போல் சார்ஸ்- கோவ் 2 வைரஸ் பாதிப்புக்கு பிறகு இரண்டு மாதங்களில் இரத்தப்போக்கு பிரச்சனைகளும் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் இரண்டாம் , மூன்றாம் அலைகளை விட முதல் கொரோனா அலையில் பாதிக்கப்பட்டுவர்களுக்கும் அதி தீவிர கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் போது, கடும் கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளுக்கு இரத்த உறைதல் தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று கூறினர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலப்படுத்துவதாக ஆய்வின் முடிவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டில் பிப்.,1 2020முதல் மே 25 2021 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை சார்ஸ் கோவ் 2 வைரஸால் பாதிக்கப்பட்ட  ஒரு மில்லியன் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் சார்ஸ் கோவ் 2 வைரஸ் இல்லை என்று வந்ததாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு  90 நாட்களுக்கு பிறகு கடும் நரம்பு இரத்த உறைதலும் 180 நாட்களுக்கு பிறகு நுரையீரல் இரத்த அடைப்பும்  60 நாட்களுக்கு பிறகு இரத்தப்போக்கான ஆபத்துகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன.

மேலும் சாதாரணா நோயாளிகளை விட கொரோனா பாதித்தவர்களுக்கு நரம்பு இரத்த உறைவு ஐந்து மடங்கும் நுரையீரல் இரத்த அடைப்பு 33 மடங்கும் இரத்தப்போக்கு இரு மடங்கும் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் லேசான அறிகுறிகளால் வீட்டு தனிமையில் குணமடைந்தவர்கள் மத்தியிலும் இந்த ஆபத்து காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முதல் அலைகளில் பரிசோதனை குறைவு, தடுப்பூசி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கூட இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios