Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஆள்.. 25 நிமிடத்தில் கடத்தப்பட்ட 110 கிலோ அரிய வகை புராதன சிலை - CCTV காட்சிகளை பார்த்து ஆடிப்போன போலீசார்

Los Angeles : கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு கலை பொருட்கள் கொண்ட அரங்கில் சுமார் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 12.5 கோடி) மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஜப்பானிய வெண்கல புத்தர் சிலை திருடப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

statue heist in Los Angeles 12 crore worth buddha statue got stolen full details ans
Author
First Published Sep 24, 2023, 5:35 PM IST | Last Updated Sep 24, 2023, 5:35 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் கூற்றுப்படி, சுமார் 250 பவுண்டுகள் (114 கிலோ) கொண்ட அந்த வெண்கல சிலை கடந்த செப்டம்பர் 18ம் தேதி அன்று பெவர்லி குரோவில் உள்ள பரகத் என்ற கேலரியில் இருந்து அதிகாலை 3.45 மணியளவில் திருடப்பட்டது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த துணிகர திருட்டு சம்பவம், அங்கிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சோதனைக்கு உள்ளன CCTV காட்சிகளில், சந்தேக நபர் ஒருவர், ஒரு டிரைவ்வே கேட் வழியாக நுழைவாயிலை உடைத்து, சிலையை ஒரு டிரக்கில் நகர்த்துவதற்கு ஒரு ட்ராலியை பயன்படுத்துவதை அதில் பார்க்கமுடிகிறது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் 25 நிமிடங்கள் நடந்துள்ளது என்றும், மேலும் அந்த சிலையை தனியொரு நபராக அந்த திருடன் திருடியது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: சுட்டுக் கொன்ற சிறுமி!

ஜப்பானின் எடோ காலத்தில் (1603-1867) உருவாக்கப்பட்ட, சுமார் 4 அடி உயரமுள்ள ஒளிவட்டத்துடன் கூடிய அமர்ந்த புத்தர் உருவம் கொண்ட அரிய வகை கலைப்பொருள் அது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நினைவுச்சின்னமான இந்த வெண்கலச் சிலை, ஒரு காலத்தில் கோயிலின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கல்வெட்டுகளை ஆராயும்போது, ​​​​இந்த சிலை ஒரு காலத்தில் யூடோ-நோ-சான் கோவிலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த சிலை இது ஐந்து உலக கூறுகளான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஆன்மீக உணர்வுடன், ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். 

அந்த கலை பொருள் அரங்கத்தின் வெளிப்புற இடத்தில் சிற்பம் முக்கியமாக இடம்பெற்றுள்ளதால், இந்த திருட்டு திட்டமிட்டு செய்யப்பட்டதாக தான் நம்புவதாக திரு.பரகாத் (கலைக்கூடத்தின் உரிமையாளர்) மேலும் கூறினார். ''சந்தையில் இது போன்ற இன்னொன்று எங்கும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும். அந்த சிலை நான்கு அடி உயரம் கொண்ட உட்கூடான வெண்கல சிலை என்றும் அவர் கூறினார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் பாதுகாப்பு கேமரா காட்சிகளுக்காக அப்பகுதியில் சோதனை நடத்திவருகின்றனர். லண்டன், சியோல் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள பரகாத் கேலரி, அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையை கடந்த 2017ம் ஆண்டு திறந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்.. 24,000 ரூபாய் கொடுத்து மீன்கள் வாங்குனது இதுக்கு தானா? - காண்போரை அசரவைத்த அதிசய மனிதர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios