இலங்கையின் உவா மாகாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜல்லிகட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம். உவா மாகானத்தின் சாலை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் தமிழரான செந்தில் தொண்டமான்.மலையக தமிழர்களின் பிரபல தலைவரான ஆறுமுக தொண்டமானின் உறவினரும்,முன்னாள் அமைச்சர் தொண்டமானின் பேரனுமான இவர் இலங்கையில் பல வருடங்களாக அமைச்சராக உள்ளார்.
அமைச்சராக இருந்த போதிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜல்லிக்கட்டு, தமிழர் பண்பாடு, காளைகள் குறித்த சிந்தனையிலே செலவிடுகிறாராம்.
தனது 15 வயதிலிருந்தே ஜல்லிகட்டு காளைகளை வளர்த்துவரும் இவர்.இந்த தமிழர் வீர விளையாட்டு தனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்கிறார்
தமிழகத்தின் தென்மாவட்டமான சிவகங்கையில் தமது குடும்பத்தினரால் 8 தலைமுறையாகவே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்களாம்.. தற்போது இவரும்10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழகம் வந்து ஒரு மாடு வளர்க்கும் விவசாயியாகவே மாறி அந்த மாடுகளுடன் முழு நேரத்தையும் செலவிடுவாராம்.
தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நல சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதை பின் நின்று நடத்துகிறார்.
அதில் பல மாவட்டத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு அமைப்பினர் உறுப்பினராக உள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெ. வின் இறுதி சடங்கின் போது மரியாதை செலுத்திம் வாய்ப்பை பெற்ற ஒரு சிலரின் இவரும் ஒருவராவார்.
ஜல்லிக்கட்டு குறித்து நம்மிடம் செந்தில் தொண்டமான் பேசும்போது ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் எப்போது நடக்கும் என்பதை தமிழக மக்களை விட ஒரு படி அதிகமாகவே தாம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கிய ஆரம்ப காலகட்டமான 2006ஆம் ஆண்டே நாடு கடந்து வந்து உச்சநீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என முதன்முதலில் தமிழர் வீர விட்டு பாதுகாப்பு நலசங்கம் சார்பாக வழக்கு தொடுத்தவர் செந்தில் தொண்டமான் ஆவார்.
காஷ்மீர் போன்ற பனி பிரதேசங்களில் 'யாக்' எனப்படும் எருதுகள் மீது அமர்ந்து கொண்டு 10 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்கின்றனர்.
அந்த விலங்குகள் படும் துன்பத்தை பார்த்து தாம் மிகுந்த வேதனைக்குள்ளானதாகவும், ஆனால் அதை பற்றி யாரும் கேள்வி எழுப்பாமல் வெறும் 10 செகண்டுகள் மட்டும் காளைகளின் திமிலை தழுவிக்கொண்டு ஓடுவது எப்படி குற்றமாகும் என அதிரடியாக கேள்வி எழுப்புகிறார்.
விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் தமிழர்களின் கலாச்சராத்தை நசுக்குவதாகவும், இது தமிழ்நாட்டு தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல.. ஒட்டுமொத உலக தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்பான பிரச்சனையாகும்.
எனவே தான் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத வகையில் இந்திய எல்லைக்குட்பட்ட பிரச்சனைகளை கடந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களுக்காக தாம் வழக்கு தொடர்ந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்.
இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களை பலமுறை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும்
தமது அமைப்பு சார்பாக தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மாணவர்களிடையே எழுந்த எழுச்சியின் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடக்கும் என அடித்து ஆருடம் கூறுகிறார் செந்தில் தொண்டமான்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST