இலங்கை ராணுவ தளபதி ராஜினாமா... புதிய ராணுவ தளபதி ஜூன்.1ல் பொறுப்பேற்பு!!
இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இராணுவ கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தென் இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 9 ஆம் தேதி இலக்கையில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களின் போது தம்மை பாதுகாக்க இராணுவத்தினர் தவறியுள்ளதாக அரசியல்வாதிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டன. இவ்வாறான வன்முறையின் போது அரசியல்வாதிகளான தமக்கு பாதுகாப்பு வழங்காமல், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பாக இராணுவம் செயற்பட்டதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இராணுவ தளபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும், நிலையில் அவர் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, தற்போது பதவி வகித்து வரும் இராணுவப் பிரதானி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
முன்னதாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதற்கு அந்நாட்டு அரசு தான் காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. இதில் பல அமைச்சர்கள் விடுகளுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதற்கிடையே மகிந்த ராஜப்க்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்த போதிலும் போராட்டம் முடிவுக்கு வரவில்கை. இதை அடுத்து புததாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் அமைச்சர்கள் பலர் இணைந்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.