இலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபக்சே… அதிரடி திருப்பம் !!

இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அண்ணனும் முன்னாள் ஜனாபதியுமான மஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

srilanga prime minister Mahinda rajabakeshe

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையில், கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளும் (52.25 சதவீதம்), சஜித் பிரேமதாசாவுக்கு 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளும் (41.99 சதவீதம்) கிடைத்தன. இதர வேட்பாளர்கள் 5.76 சதவீத வாக்குகள் பெற்றனர்.

srilanga prime minister Mahinda rajabakeshe

புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சஜித் பிரேமதேசா தோல்வி அடைந்ததும்,  பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios