இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்..! வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்
இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று காலமானார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆறுமுகன் தொண்டன். 55 வயதான ஆறுமுகன் தொண்டன், தமிழர்களிடையே மிகப்பிரபலமானவர். இலங்கையில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்துவந்தார்.
ஆறுமுகன் தொண்டமான், 1990ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் பிரவேசம் எடுத்தார். 1993ம் ஆண்டு தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நிதி செயலாளராக இருந்த அவர், 1994ம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். 1994ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆறுமுகன் தொண்டன், தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து மக்கள் பணியாற்றிவரும் ஆறுமுகன் தொண்டமான், இன்று அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறுமுகன் தொண்டமான், அவரது வீட்டில் தவறிவிழுந்துதான் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
55 வயதான ஆறுமுகன் தொண்டமான், திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.