sri lanka crisis: இலங்கையில் டீசல் விரைவில் காலியாக வாய்ப்பு: 300 கோடி டாலர் உதவி கோருகிறது கோத்தபய அரசு

sri lanka crisis:  இலங்கையில் இந்த மாதத்துக்குள் பெட்ரோல் பம்ப்புகளில் டீசல் காலியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதனால் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க 300 கோடி டாலர் உதவி கோருகிறது இலங்கை அரசு

sri lanka crisis : Island nation seeking $3 billion in months to stave off crisis

இலங்கையில் இந்த மாதத்துக்குள் பெட்ரோல் பம்ப்புகளில் டீசல் காலியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதனால் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க 300 கோடி டாலர் உதவி கோருகிறது இலங்கை அரசு

பொருளாதாரச் சிக்கல்

கடந்த 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலைப் பெற்றபின் இலங்கை அரசு மிக மோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இலங்கை அரசிடம் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்துவிட்டதால் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இருக்கிறது.

sri lanka crisis : Island nation seeking $3 billion in months to stave off crisis

மக்கள் போராட்டம்

இதனால், பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதால் கடந்த ஓரு மாதமாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களின் போராட்டத்துக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்ச நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச்சந்திக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

sri lanka crisis : Island nation seeking $3 billion in months to stave off crisis

இந்தியா உதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க இந்தியாவிடம் உதவி கோரியது. இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி 40ஆயிரம் லிட்டர் டீசலுடன் ஒரு கப்பல் இலங்கைக்குச் சென்றது. இந்த கப்பல் சென்றபின்புதான் இலங்கையில் டீசல் மூலம் நடக்கும் மின் உற்பத்தி நடந்து, மின்வெட்டு நேரம் 13 மணியலிருந்து 2 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள், சரக்குப் போக்குவரத்தும் இயங்கத்தொடங்கியது.

இதற்கிடையே வரும் 15ம் தேதி, 18ம் தேதி, 23ம் தேதிகளில் இந்தியா சார்பில்3 கப்பல்கள் டீசல்களுடன் இலங்கைசெல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல்கள் இலங்கை சென்றால்தான் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து இயங்க முடியும். இல்லாவிட்டால் மீண்டும் டீசல் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும், மக்கள் மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்வார்கள்

sri lanka crisis : Island nation seeking $3 billion in months to stave off crisis

மருந்துப் பற்றாக்குறை

இதற்கடையே இலங்கை மருத்துவ அமைப்பு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ பொருளாதாரப் பிரச்சினையால் அத்தியாவசிய மருந்துகள்கூட பற்றக்குறை நிலவுகிறது. சுகாதாரத்துறையில் மருந்து, மருத்துவச் சாதனங்கள், உயிர்காக்கும் மருந்துகள் சப்ளையில் சிக்கல் நிலவுகிறது. இதனால் வழக்கமாகச் செய்யும் அறுவை சிகிச்சையைச் செய்ய முடியவில்லை. இருக்கின்ற மருந்துகள், வசதிகளை அவசரநிலைக்கு வைத்துள்ளோம். ஆதலால் இந்த பற்றாக்குறை நிலையை போக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

300 கோடி டாலர்

இதற்கிடையே இலங்கை நிதிஅமைச்சர் அலி சாப்ரே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இலங்கையின் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க அடுத்த சில மாதங்களுக்கு 300 கோடி டாலர் தேவைப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்திடம் பேச்சு நடத்தி வருகிறோம். ஜூலை மாதம் 100 கோடி டாலரை கடன்பத்திரங்களுக்கு இலங்கை அரசு செலுத்த வேண்டும். அதற்காக அவகாசம் கேட்கப்படும். எங்களின் ஒவ்வொரு முயற்சியும் கடினமாக இருக்கிறது 

sri lanka crisis : Island nation seeking $3 billion in months to stave off crisis

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்கவும் அடுத்த 5 வாரங்களுக்கு 50 கோடி டாலர் அளவுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய வேண்டும் என இந்தியாவிடம்  இலங்கை கோரியுள்ளது.
மேலும், ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, பிரி்ட்டன், சீனா, அமெரிக்காவிடமும் நிதியுதவி கோரியுள்ளோம். இது தவிர வெளிக்கடன்களை அடைக்க சீனாவிடம்கூடுதலாக 100 கோடி டாலர்களும், 150 கோடி அளவுக்கு சீனாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களும் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios