Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் என்ன நடக்கிறது..? வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது..!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து அதிரடி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

sri lanka blast...3 people arrest
Author
Sri Lanka, First Published Apr 25, 2019, 5:47 PM IST

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பையடுத்து அதிரடி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை படை தாக்குதலில் 4 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 359 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. sri lanka blast...3 people arrest

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொழும்பு நகரமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. sri lanka blast...3 people arrest

இந்நிலையில் இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த 21 குண்டுகளும் நாட்டு வெடிகுண்டுகள் எனத் தகவல் தெரியவந்துள்ளது. இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் 61 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 3 பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios