2026 வரை பொறுத்திருங்கள்!.. பொருளாதார நெருக்கடி விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி  2026 வரை நீடிக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Sri Lanka Bankruptcy to Last Until 2026 says President Ranil Wickremesinghe

நமது அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதது.இதனால் இலங்கையில் விலைவாசி அதிகரித்ததோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.இதற்கு காரணமாக இருந்த ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தினர். பிறகு நடந்தது எல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி  2026 வரை நீடிக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Sri Lanka Bankruptcy to Last Until 2026 says President Ranil Wickremesinghe

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நிதிகளை சரிசெய்வதற்கு தாம் வேலை செய்வதால், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு நம் நாடு திவாலாகி இருக்கும்.

மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் நாம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவு. நினைவில் வைத்து கொள்ளுங்கள், நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை. இந்த தேசம் விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்.

இதையும் படிங்க..பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

Sri Lanka Bankruptcy to Last Until 2026 says President Ranil Wickremesinghe

கடந்த மாதம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, வர்த்தகர்கள் முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில், கடந்த ஆண்டில் பொருளாதாரம் 11 சதவீதம் வரை சுருங்கிவிட்டது. வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களை அகற்றுவது இலங்கையின் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கற்றதாக உள்ளது.

ஏற்கனவே நெருக்கடி மற்றும் பரவலான பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது நிலுவையில் உள்ள கடன் தொடர்பாக சீனாவுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாதகமான பதில்களை பெற்றுள்ளதாகவும் இறுதி உடன்படிக்கையை நோக்கி செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios